Republic Day Chief Secretary orders

குடியரசு தினவிழா: தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!

அரசியல்

குடியரசுத் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாக்களில் இன்றும் சில கிராமங்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகள் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மாற்று சமூகத்தினர் வன்முறையில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.

வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் 75 ஆவது சுதந்திர தினத்தில் எந்தவித சாதியப் பாகுபாடுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களைக் கொண்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டத்தை நடத்தவேண்டும். அதில் சாதிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்வதை உறுதி செய்யவேண்டும்.

பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

கலை.ரா

பனிக்கடலாக மாறிய கொடைக்கானல்

மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்றச்சாட்டு: நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0