அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கப்படுவதாகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எடப்பாடியைக் கட்சியிலிருந்து நான் நீக்குகிறேன் என்று அறிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் செய்தியாளார்களைச் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக சட்டவிதி படி ஒன்றைக் கோடி தொண்டர்கள் என்னை ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தனர். என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி. முனுசாமிக்கோ அதிகாரம் இல்லை. இவர்கள் இருவரும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகத் தன்னிச்சையாக அறிவித்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி இருவரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்குகிறேன் என்பதை அறிவிக்கிறேன்” என்று கூறினார்.
அடுத்தகட்டமாக நீதிமன்றத்துக்கு அப்பீலுக்கு செல்கிறோம் என்று வைத்திலிங்கம் கூற தொண்டர்களுடன் இணைந்து உரிய நீதியைப் பெறுவோம் என்றார் பன்னீர் செல்வம்.
-பிரியா