ரூ.8,000 கோடியை கடந்த பதிவுத்துறை வருவாய்: அமைச்சர் மூர்த்தி

அரசியல்

தமிழ்நாடு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக  பதிவுத்துறை வருவாய் ரூ.8,000 கோடியை கடந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

ஆவணங்கள் பதிவு அதிகரித்து அதன் மூலம் அரசுக்கு வரி வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பதிவு செய்ய வருவோரை ஆதார் எண் மூலம் சரி பார்த்தல், வரிசைக்கிரம டோக்கன் முறை, சரியான நிலமதிப்பு நிர்ணயம், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பதிவு சேவைக்காக இந்துறையை நம்பிக்கையோடு நாடுகின்றனர்.

அனைத்துக்கும் மேலாக கடந்த காலங்களில் நடந்த மோசடி பதிவுகளின் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு போலி ஆவணப் பதிவுகளை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறைப்படுத்துவதை முதலமைச்சர் எதிர்வரும் 28.09.2022ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்கள்.

இந்த பல்வேறு முன்னோடி முயற்சிகளின் விளைவாக கடந்த 21.09.2022 வரை 16,39,128 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 8,082 கோடி வருவாயான ஈட்டப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டில் இதே நாளில் எட்டப்பட்ட ரூபாய் 5,757 கோடியை விட ரூபாய் 2.325 கோடி அதிகமாகும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

-ராஜ்

மொழிகளைக் கடந்த மொழியை கௌரவிப்போம்: உலக சைகை தினம்!

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.