டாஸ்மாக் கடைகளில் ரூ 2000 வாங்கப்படாது என்று பரவிய தகவல் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (மே 19), யாரும் எதிர்பார்க்காத விதமாக ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. வரும் 23 ஆம் தேதி முதல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது.
இந்நிலையில் மது கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது. அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்தான் பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இதற்கு இன்று (மே 20) மறுப்புத் தெரிவித்துள்ள தமிழக மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “முற்றிலும் தவறான செய்தி. இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரியா
“பாசமா எல்லாம் வேஷம்” : மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!
500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்!