அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்தசூழலில் செந்தில் பாலாஜி மேலும் 2 மனுக்கள் தாக்கல் செய்தார்.
“அமலாக்கத் துறை வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை கையால் எழுதி திருத்தியிருக்கிறது. தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி உண்மையை கண்டறிய வேண்டும்” என்று ஒரு மனுவில் கோரப்பட்டிருந்தது.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த, இந்த வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கவுதமன் ஆஜராகி, அமலாக்கத் துறையால் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டிருக்கிறது என்றார்.
அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜரானார். “இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த ஆவணங்கள் வங்கியில் இருந்துதான் பெறப்பட்டது. விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்” என்றார்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவையும் தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து, வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஜூலை 22ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நீட் முடிவுகளை மையம் வாரியாக வெளியிட உத்தரவு : உச்ச நீதிமன்றம் அதிரடி!
காமராஜ் அவர்களுக்கு வணக்கம்..
இந்த தீர்ப்பு கொண்டு போகிற திசைகள் எங்கே போகிறது! ஞாயங்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதை விட! முதன் முதலில் வாங்கின பணத்தை லஞ்சமானாலும் திருப்பி கொடுத்தால் சட்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என யோசனை கொடுத்தவனை இன்னமும் நம்பி தான் ஓரளவுக்கு கண்டிப்பாக கிடைக்க போகுற தண்டனையை காலம் தான்ட சம்மந்தம் இல்லாமல் மனு போடுகிறாரா! அரசும் அரசாங்கமும் உள்ளூர் கோர்ட் முதல் உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றம் வரை ஒன்றும் தெரியாதவர்களா?
நீதியரசர் அல்லி யார் என்பது முன்னமே தெரியாதா? அவருக்கு ஏற்ற மனநிலையில் ஒரு மனுவாக கூட இவர் சார்பாக தர பெற்றதா? மந்திரி என்ற திமிர் அடங்கி..ச.ம.உ உதார் அடங்கி அவசியம் கொஞ்சமான உடலை கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?????
ஆரம்பத்தில் இருந்து இவருக்கு துர் போதனை தந்தவன் எவன்?
ஆட்சி அதிகாரமா?
சிக்கிய வழக்குகள் கொஞ்சமா நஞ்சமா!!
கண்டக்டர் டிரைவர் வழக்கில் உள்ள சாட்சிகள் இவர் சட்டபடி பன்னின தவறை விடாது..
அசோக் கைதாகும் வரை அவரை கரூரில் வைத்து அரசு காப்பாத்தும் வீடியோ வரை கடைசி நேர ஞாமின் முன் கூட தரப்படலாம் என்பது வரை அத்தனையும் பின்னோக்கி இருந்தால்….
7 வருட தண்டனைக்கு குறை வராது எனவே நம்புவோம்…
ஒரு பில் கேட்ட கொடுமைகளை பார்த்தீர்களா??? அதை சுத்த யோக்கியன் கேட்டிருந்தால் பரவா இல்லை.. 🙏..
மோடி மட்டுமல்ல எந்த ஆட்சி வந்தாலும் தொடரும்..😔