வந்தே பாரத் டிக்கெட் கட்டணத்தை குறையுங்கள்: மு.க.ஸ்டாலின்

அரசியல்

வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறையுங்கள் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து துறை சார்பில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்று வரும் 5200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கும் அரசு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “சென்னை டூ கோவை வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்தின் மேற்கு பகுதி வாழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.


இதேபோல் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை டூ மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
அதோடு வந்தே பாரத் ரயில் கட்டணத்தை அனைவரும் பயணம் செய்யும் வகையில் குறைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
வந்தே பாரத் ரயிலில் AC Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல ரூ.1,215 கட்டணம் வசூலிக்கப்படும். AC Executive Chair Car வகுப்பில் பயணம் செய்ய ரூ.2,310 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

“தமிழக மக்களை நேசிக்கிறேன்”: பிரதமர் மோடி

பிரதமருடன் ஒரே காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *