பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 500 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷ்ய ராணுவக் கிடங்கை, உக்ரைன் ராணுவம் தகர்த்தியுள்ளது, இந்தப் போரில் உக்ரைன் மீண்டெழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் உக்ரைனின் 20 சதவிகிதம் பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. இதில் துறைமுகங்கள், முக்கிய நகரங்கள் அடங்கும். தற்போது 17 சதவிகிதமாக ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் அளவு குறைந்துள்ளது. போர் தொடங்கிய முதல் சில மாதங்களில் கீவ், கார்கிவ் போன்ற வடகிழக்கு உக்ரைன் நகரங்கள் வரை ரஷ்யப் படைகள் முன்னேறிச் சென்றன.
ரஷ்ய தாக்குதலின் வேகத்தைப் பார்த்த உலக நாடுகள் உக்ரைன் ஒரு சில வாரங்களில் சுருண்டுவிடும் என்று கணித்தன. ஆனால், அந்தத் தாக்குதல் இன்று வரை 16 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த மகிவ்கா நகரில் இருந்த ரஷ்ய ராணுவ கிடங்கை, தகர்த்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவ தரப்பு கூறுகையில், பாதுகாப்பு படையினரின் துல்லியமான தாக்குதலால் மகிவ்கா பகுதியில், ரஷ்ய பயங்கரவாதிகளால் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, உக்ரைன் தலைநகரான கிவ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் காயமடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போரை மேற்குலக நாடுகள்தான் மறைமுகமாக நடத்துகின்றன என்று ரஷ்யா தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. ரஷ்யாவை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது என புதின் அதிரடிப் பேச்சுக்களை அவ்வப்போது உதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்