காங்கிரஸ் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, அவரது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மார்ச் 23 ஆம் தேதி அவர் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்களவைச் செயலகம் இன்று (மார்ச் 24) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்து வரும் நிலையில்,
இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் தனது தாயார் சோனியா காந்தியுடனும் ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி.
இந்த நிலையில் தனது சமூக தளப் பக்கத்தில், ‘நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக நான் என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து இந்தியா முழுதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
–வேந்தன்
ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுகிறது! – முதல்வர் ஸ்டாலின்
ராகுல் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் பாஜக: கனிமொழி