நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று காலை முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் பன்னீர் செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்காக, அவர் மட்டும் போட்டியிடும் வகையில் விதிகள் திருத்தப்பட்டிருக்கின்றன.
பொதுச்செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர்.
கட்சி உறுப்பினர்களின் முழு பட்டியலை வெளியிட்டு நிபந்தனைகளை நீக்கினால் நானும் போட்டியிடத் தயார். வழக்கை திரும்ப பெறவும் தயார்” என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
பிரியா
கலைஞர் நூற்றாண்டு விழா: ஜூன் 3ல் மாநாடு!
கொரோனாவிலிருந்து மீண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்