விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!

Published On:

| By indhu

Re-examination of 20 polling centers in Tamil Nadu - Election Commission

விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடிகளில் உள்ள இவிஎம் மெஷினில் வாக்குப்பதிவை சேகரித்து வைத்துள்ள மைக்ரோ கண்ட்ரோலர் கருவியை மறு ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தேமுதிக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களிலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைகட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 6 வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பிலும், வேலூர் தொகுதியில் பாஜக சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் பிடித்தவர்கள் மைக்ரோ கண்ட்ரோலர்களை ஆய்வு செய்ய கோரிக்க்கை வைத்தால் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் விருதுநகர், வேலூரில் உள்ள 20 வாக்குச்சாவடிகளில்  மைக்ரோகண்ட்ரோலர்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், நிதியுதவி வழங்கிய உதயநிதி

கள்ளக்குறிச்சி மரணம்: அமித்ஷாவிடம் ரிப்போர்ட்… அண்ணாமலை தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel