அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். RB Udayakumar arrested by police
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாகவும், தே. கல்லுப்பட்டி வழியாகவும் செல்கிறது.
இந்த நிலையில் ஆலம்பட்டி நான்கு வழிச்சாலையில், சேடப்பட்டி விளக்கு பகுதியில் இருந்து ஆலம்பட்டி வரை சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மக்களுடன் சாலை மறியல் RB Udayakumar arrested by police

இந்த பாலத்திற்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படாததால் மக்கள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகளால் அந்த பகுதியில் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பாலத்திற்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்க கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து இன்று (ஜனவரி 30) போராட்டத்தில் குதித்தனர்.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமாரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். தொடர்ந்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை கைது செய்த போலீசார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமாரையும் கைது செய்தனர்.
சர்வாதிகார போக்கிற்கு முற்றுப்புள்ளி RB Udayakumar arrested by police

இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கடந்த 44 மாத திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும் நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் நடந்து வருகிறது. மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை இந்த அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. மக்கள் நலனை முன்னெடுத்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவர்களை கைது செய்யும் போக்கும் தொடர்கிறது.
அதிமுக மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடும். மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாமல் போராடுபவர்களை கைது செய்யும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்கிற்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. RB Udayakumar arrested by police