தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பன்னீர் செல்வத்தை நீக்கிய நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று கேள்வி எழுந்தது. அதன்படி கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் அந்த பதவியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments are closed.