புதுச்சேரி முதல்வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி இன்று (ஏப்ரல் 19) தனது யமஹா RX100 பைக்கில் சென்று வாக்களித்தார்.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி வைத்திலிங்கம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இடையே போட்டி நிலவுகிறது.
#WATCH | Riding a motorcycle, Puducherry CM N. Rangasamy arrived at a polling booth in Delarshpet, Puducherry to cast his vote #LokSabhaElections2024 pic.twitter.com/A2EnQtf117
— ANI (@ANI) April 19, 2024
இந்தநிலையில், புதுச்சேரி திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க ரங்கசாமி தனது RX 100 பைக்கில் சென்றார். வாக்களித்துவிட்டு மீண்டும் பைக்கிலேயே கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு அவருடன் பாஜக வேட்பாளர் நமசிவாயமும் தரிசனம் மேற்கொண்டார். ரங்கசாமி பைக்கில் வாக்களிக்க சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபல ‘நடிகருக்கு’ அடிச்சது லக்.. சன் டிவியின் ‘புதிய’ சீரியல் இதுதான்!
“ஓட்டுப் போட எப்படி ஊருக்கு போறது?” – கிளாம்பாக்கத்தில் பயணிகள் போராட்டம்!