வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்… எங்களை அடக்க முடியாது – ராமதாஸ் வார்னிங்!

அரசியல்

வன்னியர் சங்க தலைவர் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 7) கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “கடலூரில் வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழியின் கழுத்தை வெட்டுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஆனால், காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையையும் அவர்கள் மீது எடுக்கவில்லை.

காவல்துறையின் ஈரல் மட்டும் அழுகவில்லை, இதயம் மூளையும் அழுகிவிட்டது என்று கலைஞர் சொல்வார். அதையே தான் நானும் இப்போது சொல்கிறேன். கலைஞர் சொன்னது இத்தனை ஆண்டுகள் கடந்தும் சரியாக தான் இருக்கிறது.

காவல்துறையினர் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படக்கூடாது. பாமக தொண்டருக்கு ஆறுதல் கூற சென்ற மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மீது எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாங்கள் ஏமாளிகள் அல்ல. மிகவும் பொறுமையாக இருக்கிறோம். எத்தனையோ போராட்டங்களை பார்த்திருக்கிறோம். பாளையங்கோட்டை சிறையை தவிர அனைத்து சிறைகளுக்கும் சென்றிருக்கிறோம். அதனால் சிறைக்கு போவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  ஆனால், நாங்கள் அமைதியை விரும்புகிறோம்.

நூற்றுக்கணக்கான அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்திருக்கிறேன். அம்பேத்கர் சிலையை யாராவது சேதப்படுத்தினால் முதல் குரல் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் குரல் தான் எதிரொலிக்கும். எங்கள் மீது தவறாக நடவடிக்கை எடுத்தால், எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எத்தனை நாட்கள்  எங்கள் மீது எஸ்.டி, எஸ்.டி வழக்கு போடுவீர்கள். அனைவரும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார். அதையே தான் நானும் சொல்கிறேன், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, “மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலர் முன்பாகவே என்னுடைய கழுத்தை அறுப்போம் என்று பேசியிருக்கிறார்கள். வன்முறையை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள், ரவுடிகளை பிடிக்கிறார்கள். ஆனால், காவல்துறை கண்காணிப்பாளர் முன்பு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? ” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் அடையாளம்!’ – நடிகர் சூர்யா வாழ்த்து

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *