தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு மதுரையில் நேற்று இரவு தங்கினார். இன்று (ஏப்ரல் 9) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனால் அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்கப்படவில்லை.
தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு முன்பாக அங்குள்ள முக்குருணி விநாயகரை தரிசனம் செய்தார். பின்னர் பொற்றாமரை குளத்தில் முன் புகைப்படம் எடுத்து கொண்டார். அரை மணி நேர சாமி தரிசனத்திற்கு பின் மதுரை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
“டியர் எக்ஸஸ்”: நித்யா மேனன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!