கலைஞர் நாணய வெளியீட்டு விழா… ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி பதிவு!

அரசியல்

கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஆகஸ்ட் 18) மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

இதற்காக நாளை மதியம் 1.15 மணிக்கு சென்னை வரும் ராஜ்நாத்சிங், மாலை கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை சென்னை வருகிறேன்.

மேலும், சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்கிறேன். சென்னை வருகையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆவணி மாத நட்சத்திர பலன் – சித்திரை!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

“ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை ஆதரித்தது ஏன்?” – எடப்பாடியை சாடிய சிவசங்கர்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0