“ஸ்டாலின் உழைப்பிற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் முதல்வர் பதவி”: ரஜினிகாந்த்

அரசியல்

மு.க.ஸ்டாலின் 54 வருடங்கள் கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து இப்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். இது மக்கள் அவரது உழைப்பிற்கு கொடுத்த அங்கீகாரம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 28-ஆம் தேதி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்தநிலையில் இன்று நடிகர்கள் ரஜினிகாந்த், யோகி பாபு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “புகைப்பட கண்காட்சியை பார்ப்பதற்காக சேகர் பாபு என்னை அழைத்த போது நான் கண்டிப்பாக வருவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். சேகர் பாபு மிகவும் விசுவாசமானவர், அன்பானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகம் இருக்கிறது.

புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை பயணம் அதிசய பயணமாக உள்ளது. 54 வருடங்கள் கட்சியில் உழைத்து படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து இப்போது அவர் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். இது மக்கள் அவரது உழைப்பிற்கு கொடுத்த அங்கீகாரம். நீண்ட நாள் நல்ல ஆயுளோடு அவர் வாழ வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

முதல் நாள் திருமணம்: அடுத்த நாள் விவாகரத்து!

ஆறறிவுக்கு அன்பல்லோ அழகு !

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.