முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச் 1 ) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்று (பிப்ரவரி 28 ) வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “ வணக்கம்! என்னுடைய இனிய நண்பர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகளிர் இலவச பேருந்து திட்டத்தால் 236 கோடி பயணங்கள்: முதல்வர் ஸ்டாலின்
ஆதார் – மின் இணைப்பு: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?