rajini duraimurugan

“துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது”: ரஜினி

அரசியல் தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஜினி, அவருக்கும் அமைச்சர் துரைமுருகனுக்கும் இடையில் உள்ள நட்பு எப்போதும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 24-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் வேலுவின் ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் திமுக-வில் உள்ள மூத்த அமைச்சர்கள் பற்றிப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் “ இந்த நியு ஸ்டூடன்ட்ஸ் பிராபலமே கிடையாது. ஆனால் இந்த பழைய ஸ்டூடன்ட்ஸ் இருக்காங்க பாருங்க, அவங்களை சமாளிக்கிறது சாதாரண விஷயம் இல்லை. ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ட்ஸ். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ட்ஸ் இல்லை, அசாத்தியமானவர்கள். ஃபெயில் ஆகிட்டு இல்லை, ரேங்க் வாங்கிட்டு கிலாச விட்டு போகமாட்டோம்னு உட்கார்ந்து இருக்காங்க. துரைமுருகனென்று சொல்லி ஒருத்தர் இருக்காரு, கலைஞர் கண்ணிலேயே விரல விட்டு ஆட்டினவர்.” என்று பேசினார்.

இதைப் பற்றி வேலூரில் நேற்று(ஆகஸ்ட் 25) பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ரஜினியின் பேச்சைக் குறித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் “ மூத்த நடிகர்கள், வயசாகி, பல்லெல்லாம் விழுந்து, தாடி நரைத்த பின்பும் தொடர்ந்து நடித்து வருவதால், இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என்று சொன்னார்.

இந்த நிலையில், துரைமுருகனின் இந்த பதிலிற்குச் சென்னை விமான நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஜினி “ துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்களது நட்பு எப்போதும் போலத் தொடரும்.” என்று சொன்னார்.

தொடர்ந்து விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்து எதாவது நீங்கள் சொல்ல விரும்புகிறீர்களா என்று ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிலளித்தார்.

முன்னதாக ரஜினியைப் பற்றி துரைமுருகன் அப்படிப் பேசியதால் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனிடம் ரஜினியை தொலைப்பேசியில் அழைத்துப் பேசச் சொல்லியிருக்கிறார்.

அதன்படி அமைச்சர் துரைமுருகனும் ரஜினியை அழைத்துத் தான் அப்படிப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து குறித்து நமது மின்னம்பலம்.காம் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

திருமண மேடையில் ஏற்பட்ட காய்ச்சல்… புதுப்பெண் பலியான சோகம் – கேரளாவில் அதிர்ச்சி!

இன்று தங்கம் விலை எவ்வளவு?

“கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்” : ரவிகுமார் எம்.பி விமர்சனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *