பண மோசடி வழக்கில் ஜாமீன் மீதான நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.
ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 3 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பான பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ராஜேந்திர பாலாஜி விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியில் செல்லக்கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா “ராஜேந்திர பாலாஜி தமது கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில், அதனை பரிசீலனை செய்து வழக்கின் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
குறுக்குவழியில் நுழையும் பிஜேபிக்கு பீகாரில் மரண அடி: கி.வீரமணி