ராஜஸ்தான் மாநிலத்தில் 199 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 25) காலை 7 மணிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு துவங்கியது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் குனார் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் 199 தொகுதிகளிலும் நேரடியாக மோதுகின்றன. ராஜஸ்தானில் 5,26,90,146 வாக்காளர்கள் உள்ளனர். 51,890 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1,02,290 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்
பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?