ராஜஸ்தான்: பின்தங்கும் காங்கிரஸ்… ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 3) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது 2 மணி நேர நிலவரப்படி, பாஜக 114 இடங்களில் பெரும்பான்மையுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளுடன் பின்னடைவில் உள்ளது. மற்ற கட்சிகள் 15 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள ஜலர்பதான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராம் லால் சௌஹான் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜே 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல் சோராசி சட்டமன்றத் தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி) வேட்பாளர் ராஜ்குமார் ரோட் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 1,11,150 வாக்குகள் பெற்ற ராஜ்குமார் ரோட் 69,166 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

இந்திய சினிமாவில் தொடரும் ஷாருக்கான் சாதனைகள்!

மீண்டும் கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *