ராஜஸ்தான்: 25 அமைச்சர்களில் 17 பேர் தோல்வி… காங்கிரஸ் அதிர்ச்சி!

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமுள்ள 199 இடங்களில் 115 இடங்களை வென்று  ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. காங்கிரஸ், 68 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பான வெவ்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் பெரிய அதிர்ச்சியாக காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் இருந்த 26 அமைச்சர்களில் 17 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அக்கட்சியின் பிரச்சாரக் குழுவிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் கோவிந்த் ராம் மேக்வாலும் தோற்றிருக்கிறார்.

கஜுவாலா தொகுதியில் பாஜகவின் விஸ்வநாத் மேக்வாலிடம் முக்கிய அமைச்சரான கோவிந்த் மேக்வால் தோல்வியடைந்தார். ரமேஷ் சந்த் மீனா (சபோத்ரா), ஷேல் முகமது (போகரன்), பன்வர் சிங் பதி (கோலாயத்), சகுந்தலா ராவத் (பன்சூர்), விஸ்வேந்திர சிங் (தீக் கும்ஹர்) மற்றும் உதய்லால் அஞ்சனா (நிம்பஹேரா) ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்த மற்ற காங்கிரஸ் அமைச்சர்கள்.

அமைச்சர் ஜாஹிதா கான் 13,906 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அமைச்சர்கள் பஜன் லால் ஜாதவ் (வீர்), மம்தா பூபேஷ் (சிக்ராய்), பர்சாதி லால் மீனா (லால்சோட்), சுக்ராம் விஷ்னோய் (சஞ்சூர்), ராம்லால் ஜாட் (மண்டல்), பிரமோத் ஜெயின் பயா (ஆன்டா) மற்றும் ராஜேந்திர யாதவ் (கோட்புட்லி) ஆகியோரும் தேர்தலில் தோல்வியடைந்தனர். .

கெலாட்டின் முக்கிய  ஐந்து ஆலோசகர்களான சன்யம் லோதா (சிரோஹி), ராஜ்குமார் ஷர்மா (நவல்கர்), பாபு லால் நகர் (டுடு), டேனிஷ் அப்ரார் (ஸ்வாய்மதோபூர்) மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் ஆர்யா (சோஜாத்) ஆகியோரும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

அமைச்சர்கள் தோல்வி என்றால் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

சர்தார்புரா தொகுதியில் பாஜகவின் மகேந்திர ரத்தோரை தோற்கடித்து 26,396 வாக்குகள் வித்தியாசத்தில் கெலாட் வெற்றி பெற்றார். 2018-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 45,597 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கெலாட். ஆனால் இந்தத் தேர்தலில் 45 ஆயிரத்து 597 என்ற வித்தியாசம் 26 ஆயிரமாக குறைந்துவிட்டது.  வெற்றி பெற்ற சில அமைச்சர்களின் வாக்கு வித்தியாசமும் குறைந்துவிட்டது.

கெலாட்டின் அமைச்சரவையே தோல்வியுற்றதில் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறது காங்கிரஸ்.  அசோக் கெலாட், தனது முதல்வர் பதவியை நேற்று இரவே ராஜினாமா செய்தார்.

வேந்தன்

IND vs AUS: தொடரை கைப்பற்றிய இந்தியா

தை மாதம் நெருங்குது… தங்கம் விலை எகிறுது!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *