அமைச்சர் எ.வ.வேலுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (நவம்பர் 3) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “இது வழக்கமாக நடப்பதுதான். திமுகவில் பல்வேறு அணிகள் இருப்பது போல பாஜகவில் ஐடி அணி, அமலாக்கத் துறை அணிகள் உள்ளன. அவர்கள் அவர்களது வேலையைச் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் சட்டப்படியாகச் சந்திப்போம்” என்றார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “மக்கள் பணியைச் செய்யாத ஒன்றிய அரசு இப்படிச் செய்து கொண்டிருக்கிறது. இந்த வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் நாடகம்” என கூறினார்.
அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் ஐடி ரெய்டு அதிகரிக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு, “தாராளமாக நடத்தட்டும், மிகவும் நல்லது. ஒன்றிய அரசு மற்றும் அதனுடன் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பொருந்துமா? என்று பார்க்க வேண்டும். ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும். இதெல்லாம் அச்சுறுத்தலே இல்லை” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இலங்கைக்கு உதவி செய்வது கடமை: நிர்மலா சீதாராமன்
காற்று மாசால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம்!
மிக கனமழை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்!