முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்டம்பர் 13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய கோவை சுகுணாபுரத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை, கோவை மாநகராட்சிகளில் முறைகேடாக ஒப்பந்தங்களை எஸ்.பி வேலுமணி தனக்கு நெருங்கியவர்களுக்கு வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
அதுபோன்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை, கோவை, சேலம், தேனி, திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. மொத்தம் 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.
செல்வம்