கோடிக்கணக்கில் சொத்து குவித்த முன்னாள் அமைச்சர்: 49 இடங்களில் சோதனை!

அரசியல்

அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் 01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்ப்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது பெயரிலும், குடும்பத்தினர், நண்பர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப் பிரிவுகள் 120(B) of IPC, 13(2) r/w 13(1) (e), 13(2) r/w 13(1) (e) r/w 109 IPC, 13(2) r/w 13(1) (b) 12 r/w 13(2) r/w 13(1) (b) of PC Act as amended in 2018-ன் படி நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்.ஐ.ஆரில் முதலாவதாக காமராஜ் பெயரும் அடுத்து அவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரசேகரன் ,கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது .

வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

-பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *