இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் இன்று (செப்டம்பர் 8) தொடங்கி உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற நடைபயணத்தை நேற்று கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார்.
மொத்தம் 150நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு சுமார் 3,570 கி.மீ தூரத்திற்கு செல்கிறார்.
ராகுல் காந்தியுடன் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக அரசின் வெறுப்புவாதம், தேசிய கொடியின் முக்கியத்துவம், நடை பயணத்தின் நோக்கம் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் இருந்து இன்று காலை தேசிய கொடி ஏற்று பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாவது நாள் பயணத்தை ராகுல்காந்தி தொடங்கி உள்ளார்.
அவருடன் சுமார் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெள்ளை நிற ஆடையில், கையில் தேசிய கொடியுடன் பங்கேற்றுள்ளனர். ராகுல் காந்தியின் பயணத்திற்கு ஆதரவாக வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி அவரை வரவேற்று வருகின்றனர்.
இதனையடுத்து நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இறந்து போன காங்கிரசுக்கு ராகுல் உயிர்தர முடியுமா?: வானதி ஸ்ரீனிவாசன்