காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதிநீக்கம்!
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக இன்று (மார்ச் 24) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி பேசியிருந்தார்.
இதுகுறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவையின் செயலாளர் உத்பால் குமார் சிங் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அவதூறு வழக்கில் வயநாடு தொகுதி எம்.பியான ராகுல்காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து மார்ச் 23 முதல் (நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அஜித் தந்தை மறைவு: விஜய் ஆறுதல்!
50 பேர் ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்? பட்டியலிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்