யார் என்ன சதி செய்தாலும் சட்ட போராட்டம் தொடரும்: காங்கிரஸ்

அரசியல்

யார் என்ன சதி செய்தாலும், எந்த நிலையிலும் ராகுல்காந்தியின் சட்ட போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசியிருந்தார்.

இதுகுறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து வயநாடு தொகுதி எம்.பியான ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவையின் செயலாளர் உத்பால் குமார் சிங் இன்று (மார்ச் 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது சட்ட நிபுணர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவரது போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அவர் உங்களுக்காகவும், இந்த நாட்டிற்காகவும் வீதி முதல் பாராளுமன்றம் வரை தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.

யார் என்ன சதி செய்தாலும், எந்த சூழ்நிலையிலும் ராகுல்காந்தி தனது போராட்டத்தை தொடருவார். இந்த விஷயத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவரது போராட்டம் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதிநீக்கம்!

கிரிமினல்களுக்கு அமைச்சரவை… எதிர்க்கட்சியினர் தகுதிநீக்கம்! – மம்தா பானர்ஜி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0