சிலிண்டர் விலை ரூ. 500 ஆக குறையும்: ராகுல் வாக்குறுதி!

அரசியல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (செப்டம்பர் 5) நடந்த பரிவர்தன் சங்கல்ப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகக் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி இன்று குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ₹3 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ. 1000-ஆக உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ. 500-ஆக விலை குறைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொதுமக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், “வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, மாநிலத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதை இலக்காக வைத்து கவனம் செலுத்தப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “குஜராத் போதைப் பொருட்களின் மையமாக மாறிவிட்டது. அனைத்து போதைப் பொருட்களும் முந்த்ரா துறைமுகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் ஏராளமான போதைப் பொருட்கள் மீட்கப்படுகின்றன. ஆனால், இதனை பாஜக அரசு கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *