ராகுல் காந்தி ரூ.8 கோடிக்கு எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார்?

அரசியல்

2024 மக்களவை தேர்தல் 7 கட்டமாக ஏப்ரல் 19 துவங்கி ஜூன் 1 வரை நடைபெறுகிறது. அதன் முடிவுகள் ஜூன் 4 அன்று வெளியாகிறது. இதில், வரும் ஏப்ரல் 26 அன்று நடைபெறவுள்ள 2ஆம் கட்ட வாக்குப்பதிவில், கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தற்போது கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் மக்களவை உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவருக்கு சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த ரூ.20 கோடி சொத்துக்களில், ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள முதலீடுகள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது வேட்புமனு தாக்கலில் தனக்கு ரூ.11.15 கோடி அசையா சொத்துக்களும், ரூ.9.24 கோடி அசையும் சொத்துக்களும் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அந்த ரூ.11.15 கோடி அசையா சொத்துக்களில், குருகிராமில் உள்ள அவரின் ரூ.9 கோடி மதிப்பிலான அலுவலகமும், டெல்லியின் மெஹ்ரவ்லியில், தன் பெயரிலும் தனது சகோதரி பிரியங்கா காந்தி பெயரிலும் உள்ள விவசாய நிலமும் அடக்கம்.

இவரின் அசையா சொத்துக்கள் இப்படி இருக்க, அவரின் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களே தற்போது பேசுபொருளாகியுள்ளது. வங்கி கணக்கில் ரூ.26.25 லட்சமும், கையில் ரொக்கமாக ரூ.55,000 பணமும், ரூ.4.20 லட்சம் மதிப்பிலான நகைகளையும் வைத்துள்ள ராகுல் காந்தி, பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபன்ட்ஸ் உள்ளிட்டவற்றில் சுமார் ரூ.8 கோடியை முதலீடு செய்துள்ளார்.

பங்குச்சந்தையில் மட்டும் ரூ.4.33 கோடியை முதலீடு செய்துள்ள ராகுல் காந்தி, 25 நிறுவனங்களின் பங்குகளை தனது பெயரில் வைத்துள்ளார்.

ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் 1231 பங்குகளை ராகுல் காந்தி வைத்துள்ளார். மார்ச் 15 அன்று அதன் சந்தை மதிப்பு ரூ.35.29 லட்சமாக இருந்துள்ளது.

மேலும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்களின் 1161 மற்றும் 1370 பங்குகளையும் ராகுல் காந்தி பெற்றுள்ளார். மார்ச் 15 அவற்றின் சந்தை மதிப்பு முறையே ரூ.27.02 லட்சம் மற்றும் ரூ.35.67 லட்சமாக இருந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் 551 பங்குகளையும் ராகுல் காந்தி வைத்துள்ளார். அதன் மதிப்பு மார்ச் 15 அன்று ரூ.35.89 லட்சமாக இருந்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் 234 பங்குகளையும், டைட்டன் கம்பெனி நிறுவனத்தின் 897 பங்குகளையும் ராகுல் காந்தி பெற்றுள்ளார். அதன் மதிப்பு முறையே ரூ.9.87 லட்சம், ரூ.32.58 லட்சமாக உள்ளது.

மேலும், குறிப்பிடத்தக்க அளவில் சுப்ரஜித் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தில் 4068 பங்குகளை ராகுல் தன்வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு மார்ச் 15 அன்று ரூ.16.65 லட்சமாக இருந்துள்ளது. அதேபோல, பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 1474 பங்குகள் ராகுல் காந்தி வசம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.42.27 லட்சமாக உள்ளது.

ராகுல் காந்தி முதலீடு செய்துள்ள மொத்த பங்குகளின் விவரம்

அதேபோல, ரூ.3.81 கோடி மதிப்பில் 7 மியூச்சுவல் பன்ட்ஸ் முதலீடுகளையும் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். அதில், அதிகபட்சமாக எச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ரெஜ்-ஜி என்ற மியூச்சுவல் பன்ட்டில் ரூ.1.23 கோடியை முதலீடு செய்துள்ளார். அடுத்தபடியாக ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் ரெஜ் சேவிங்ஸ்-ஜி என்ற மியூச்சுவல் பன்ட்டில் ரூ.1.02 கோடியை முதலீடு செய்துள்ளார்.

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள மியூச்சுவல் பன்ட்ஸ் முதலீடுகளின் விவரம்

இவை மட்டுமின்றி, ராகுல் காந்தி ரூ.15.21 மதிப்பில் தங்கப் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ளார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

சம்மர் டிப்ஸ்: சருமப் பராமரிப்புக்கு ஐந்து ஈஸி டிப்ஸ்!

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ரெய்டு!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *