ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் 150 நாட்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
தமிழத்தில் தொடங்கிய இந்த யாத்திரை 100 நாட்களை கடந்திருக்கிறது. தற்போது அவர் டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் டிசம்பர் 24, 2022 அன்று ராகுல்காந்தி டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டபோது ராகுல் காந்தியைச் சுற்றிலும் பெருகிவரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், பராமரிப்பதிலும் டெல்லி காவல்துறை முற்றிலும் தோல்வியடைந்தது.
நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், காங்கிரஸ் தொண்டர்களும், ராகுல் காந்தியுடன் நடந்து சென்றவர்களும் சுற்றுச்சுவரை அமைக்க வேண்டியிருந்தது. அதே சமயம் டெல்லி போலீசார் வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர் என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.
இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள ராகுல் காந்தி மற்றும் பாரத் ஜோடோ யாத்ராவில் சேரும் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று வேணுகோபால் கூறியிருந்தார்.
ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காங்கிரஸ் கவலை தெரிவித்த ஒரு நாள் கழித்து, அரசு அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். உரிய வழிகாட்டுதல்களின்படி மாநில காவல்துறை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து CRPF ஆல் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
2020 முதல் ராகுல்காந்தி 113 முறை பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டார். அது கவனிக்கப்பட்டு முறையாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் மறுப்பு தெரிவித்துள்ளது.
கலை.ரா
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஜனவரி முதல் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும் போன்களின் லிஸ்ட் இதோ!