மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி

Published On:

| By christopher

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி மொய்தி மற்றும் பழங்குடியினர் இடையே மோதல் வெடித்தது. பின்னர் இனக்கலவரமாக மாறிய இந்த மோதலில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எதிர்கட்சிகள் ஒன்றாக குரல் எழுப்பி வரும் நிலையில் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூர் கலவரம் குறித்து மெளனம் காத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விரைவில் மணிப்பூர் கலவரம் முடிவுக்கு வர நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.

ஆனாலும் தொடர்ந்து அங்கு பதற்றமான நிலையே நீடித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு ஜூன் 29ஆம் தேதி செல்ல உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராகுல் காந்தி வரும் ஜுன் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் மணிப்பூர் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உரையாடுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ”மணிப்பூர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பற்றி எரிகிறது. மேலும் ஏற்பட்டுள்ள சமூக மோதலில் இருந்து அமைதிக்கு திரும்ப அவர்களுக்கு ஒரு ஆறுதல் தரும் கரம் தேவைப்படுகிறது. இந்த சோகமான நேரத்தில் ஒரு மனிதாபிமான அடிப்ப்டையில் வெறுப்பு காட்டாமல், அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு” என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கடும் எதிர்ப்பு: ’கருப்பு’ சுற்றறிக்கை வாபஸ்!

சூர்யவம்சம் 2: சூப்பர் அப்டேட் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share