ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்று மாற்றியுள்ளார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று பயோவை மாற்றியிருந்தார்.
இந்தசூழலில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இதனால் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என்று மக்களவை செயலகத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முறையீடு செய்திருந்தார். அதனடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை ராகுல் காந்தி மக்களவைக்கு சென்றார். அவரை காங்கிரஸ், இந்தியா கூட்டணி எம்.பிக்கள் வரவேற்றனர். தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டதும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பயோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்று மாற்றியுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியினர் பலரும் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்
அயோத்தி ராமர் கோவில்: 400 கிலோ எடையுள்ள பூட்டு வழங்கிய முதியவர்!
“தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் இயக்குனர் ஏமாற்றிவிட்டார்” – ஆஸ்கர் தம்பதி குற்றச்சாட்டு!