காங்கிரஸ் கட்சியின் ஸ்டார் தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 11) ஐந்தாவது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கேரளாவில் தொடங்குகிறார்.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை “பாரத் ஜோடா யாத்ரா” ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.
அதன்படி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 150 நாட்கள், 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரேதசங்கள் வழியாக 3,500 கி.மீ தொலைவிற்கு ராகுல் காந்தி பயணம் செய்கிறார்.

செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
நேற்று (செப்டம்பர் 10) நான்காவது நாள் நடைபயணத்தை கன்னியாகுமரி மாவட்டம் முளகூட்டில் தொடங்கி, கேரள எல்லை தலைச்சன் விளையில் நடைபயணத்தை நிறைவு செய்தார். நேற்றுடன் தமிழகத்தில் தனது 4 நாட்கள் பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார்.

இன்று (செப்டம்பர் 11) முதல் 19 நாட்களுக்கு ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொள்கிறார். கேரளாவின் 7 மாவட்டங்களில் அவர் நடைபயணம் செய்கிறார்.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலை – திருவனந்தபுரம் – திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச்சூரிலிருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலை வழியாகவும் ராகுல் காந்தி நடைபயணம் செய்கிறார்.
பாறசாலையில், கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
செல்வம்
400 இடங்கள் பெற்றிருந்த காங்கிரசின் நிலை என்ன? பாஜகவுக்கு பயம் காட்டும் மம்தா