“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” – ராகுல் காந்தி

அரசியல்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று (ஜூன் 23) ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காலை 10 மணிக்கு பீகார் வந்தனர்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக பாட்னாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்ற மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் நிர்வாகிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியாவில் சித்தாந்த ரீதியிலான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்திரையும் மறுபக்கம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பாரத் தோடாவும் நடைபெறுகிறது.

பாஜக இந்தியாவை பிளவுபடுத்துவதற்காகவும், வன்முறை, வெறுப்பை பரப்புவதற்காகவும் செயல்பட்டு வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று பீகாரில் ஒருங்கிணைந்து மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம்.

தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவை காண முடியவில்லை. நாங்கள் ஏழைகள் பக்கம் இருப்பதால் வெற்றி பெறுவோம். ஆனால் பாஜக இரண்டு மூன்று முதலாளிகளுக்காக மட்டும் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த சோகம்!

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *