நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.
மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய ராகுல் காந்தி, “நீட் தேர்வுக்கு மாணவர்கள் பல ஆண்டுகளாக தயாராகிறார்கள். பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மாணவர்களுக்கு அவர்களது குடும்பங்கள் ஆதரவாக இருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் மாணவர்களே இன்று நீட் தேர்வை நம்பவில்லை. நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டது, தகுதியுள்ளவர்களுக்கானது அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள்.
நீட் தேர்வு எழுதும் நிறைய மாணவர்களை நான் சந்தித்தேன். இந்த தேர்வு பணக்கார மாணவர்களுக்கானது என்றும் நிச்சயமாக ஏழை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது இல்லை என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
கண்ணிவெடி தாக்குதலின் போது அக்னிபத் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அவரை தியாகி என்று அழைப்பதில்லை. அக்னிபத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தவறான கருத்துக்கள் மூலம் ராகுல் காந்தி இந்த அவையை வழிநடத்த முயற்சிக்க கூடாது. எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது உயிரிழந்த அக்னிவீரரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியை எழுந்து பதில் சொல்ல வைத்த ராகுல்… நாடாளுமன்றத்தில் நெருப்பு விவாதம்!
2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம்