மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டாள் என்று மக்களவையில் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்டு 9) பேசினார்.
மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் இன்று ராகுல் காந்தி பங்கேற்றார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்ததை அடுத்து மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றார். அதையடுத்து முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்தில் பேசினார்.
“மக்களவை உறுப்பினராக மீண்டும் நியமித்த சபநாயகர் அவர்களே உங்களுக்கு நன்றி. நான் கடைசியாக பேசியபோது அதானியின் மீது கவனம் செலுத்தியதால் உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம்.
உங்கள் மூத்த தலைவர்கள் கூட வேதனைப்பட்டிருக்கலாம். அந்த வலி உங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் நான் உண்மையை பேசினேன். மோடி விருப்பப்பட்டால் நான் சிறைக்கு செல்ல கூட தயாராக இருக்கிறேன்.
பாஜக நண்பர்கள் பயப்பட வேண்டாம், இன்று நான் அதானி பற்றி பேசப்போவதில்லை. மணிப்பூர் குறித்து பேசப்போகிறேன்” என்று தன் பேச்சைத் தொடங்கினார் ராகுல் காந்தி.
தொடர்ந்து அவர் பேசுகையில், “பாரத் ஜோடா யாத்திரை எனக்கு மிகப்பெரிய ஊக்கம் அளித்தது. யாத்திரையின் போது மக்கள் தங்கள் வேதனைகளை என்னிடம் பகிர்ந்தார்கள். இந்தியாவின் உண்மை நிலையை கண்டேன். பாரத் ஜோடா யாத்ரா முடிவடையவில்லை. இன்னும் இருக்கிறது.
நான் மணிப்பூர் சென்று வந்தேன். அங்கு பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் சந்தித்தேன். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிடவில்லை. மோடி மணிப்பூரை இரண்டாக பிரித்துவிட்டார். அவர் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதவில்லை. அதனால்தான் இன்றுவரை அவர் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசவில்லை. மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டாள்” என்று ஆவேசமாகப் பேசினார் ராகுல்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜு, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினர்.
செல்வம்
“மணிப்பூர் பற்றி பாஜகவிற்கு கவலையில்லை” – காங்கிரஸ்
நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக விவாதம்!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣..காங்கிரஸ் ஆளுகிற
ஸ்டேட்ல பெண்களுக்கு நடந்தால் அது பாரதமாதா சித்தியாடா?!