இது இரண்டு கட்சிகளுக்கிடையேயான யுத்தம் கிடையாது. இந்தியாவின் கருத்தியலை பாதுகாப்பதற்கான யுத்தமாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாட்னா கூட்டத்தை அடுத்து எதிர்க்கட்சிகள் இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இது இரண்டு கட்சிகளுக்கிடையான யுத்தம் கிடையாது. இந்தியாவின் கருத்தியலை பாதுகாப்பதற்கான யுத்தமாகும்.
பாஜக மற்றும் அதன் கொள்கைக்கு எதிரான யுத்தம். இந்தியாவுக்கும் நரேந்திர மோடிக்குமான யுத்தம். இந்தியாவின் குரல் நசுக்கப்படுகிறது. அதனால் தான் நாம் இங்கே கூடியுள்ளோம். இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்பது இந்தியா. நீங்கள் வரலாற்றை பார்த்தால் இந்தியா என்ற கருத்தியலை யாராலும் எதிர்த்து போராட முடியவில்லை என்பதை நீங்கள் உணரலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மோடிக்கு பக்கத்தில் எடப்பாடி… டெல்லியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்!
“எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்” – கார்கே