தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பில் 90 சதவிகிதம் பேர் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்கள் என்ற டேட்டா அதிர்ச்சியளிக்கிறது என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (பிப்ரவரி 3) தெரிவித்தார். rahul gandhi says caste
மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, “கடந்த முறை கேட்ட அதே ஜனாதிபதி உரையை தான் இந்த முறையும் கேட்டேன். புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. உலக நாடுகளை ஒப்பிடும் போது நாம் மெதுவாக வளர்ந்து வருகிறோம். இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனையை நம்மால் சமாளிக்க முடியவில்லை.
யுபிஏ அரசோ அல்லது இன்றைய என்டிஏ அரசோ இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து தெளிவான பதிலை வழங்கவில்லை. rahul gandhi says caste
மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அது ஒரு நல்ல திட்டம் தான். ஆனால், நம் நாட்டில் உற்பத்தியானது தொடர்ந்து குறைந்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.3 சதவிகிதமாக இருந்தது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது 60 ஆண்டுகளின் உற்பத்தியில் மிக குறைந்த பங்காகும். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை நான் குறைகூறவில்லை. அவர் முயற்சிசெய்தார், ஆனால் பலன் கிடைக்கவில்லை.
தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது சிறுபான்மையினர்.
இந்தியா முழுவதும் இதுவே நிலை என்று நினைக்கிறேன். இந்த நாட்டின் வளத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு என்பது அளப்பரியது. ஆனால், மிகப்பெரிய நிறுவனங்கள் எதுவும் ஓபிசிக்கள், தலித்துகள் அல்லது பழங்குடியினருக்கு சொந்தமானவை அல்ல. அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார். rahul gandhi says caste