இன்று கன்னியாகுமரியில் தொடங்க இருக்கும் பாதயாத்திரையை முன்னிட்டு காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று தொடங்குகிறார்.
இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கிறார். 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாதயாத்திரையில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை அக்கட்சியின் தமிழக பிரிவு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
இரவு சென்னையில் தங்கிய ராகுல்காந்தி, பாதயாத்திரையை முன்னிட்டு முதல் நிகழ்வாக இன்று காலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அவருடன் தமிழகம் மற்றும் தென்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் ராகுல் காந்தி கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் அவர்,
கன்னியாகுமரியில் பாரத் ஜோதா யாத்ரா என்ற பாத யாத்திரையை இன்று மாலை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் இன்று ராகுல் சுற்றுப்பயணம்! எங்கெல்லாம் செல்லப் போகிறார்?