மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சாதி வாரி கணக்கெடுப்பை இந்தியா முழுதும் நடத்திட வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 21) மகளிர்க்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 22) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி.
அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை நாங்கள் ஆதரித்தாலும், அதை அமல்படுத்துவது குறித்து சந்தேகம் இருக்கிறது.
பெண்கள் இடஒதுக்கீடு ஒரு நல்ல விஷயம், ஆனால் நாங்கள் இதில் இரண்டு விஷயங்களை காண வேண்டியிருக்கிரது. ஒன்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைக்கு முன் செய்யப்பட வேண்டும், இரண்டாவது தொகுதி சீரமைப்பு.
இதையெல்லாம் நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகும். உண்மை என்னவென்றால் 33 சதவீத இட ஒதுக்கீடு இன்றே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு வழங்கப்பட முடியும்.
இது ஒரு சிக்கலான விஷயமே அல்ல. ஆனால் அரசு செய்துள்ள தந்திரங்களால் மகளிர் இட ஒதுக்கீடு எப்போது செயல்படுத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது. இது ஒரு கவனச் சிதறல் தந்திரம், திசை திருப்பும் தந்திரம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, “இந்த மசோதா மூலம் சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஓபிசி சமூகத்தின் நலனுக்காக எதையும் செய்யவில்லை.
மத்திய அரசின் கேபினட் செயலாளர்களில் 90 பேரில் மூன்று பேர் மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர்.
ஏன் இந்த நிலைமை? பிரதமர் மோடி ஓபிசி சமூகத்துக்காக என்ன செய்தார்?” என்று கேள்விகளை அடுக்கினார் ராகுல்.
–வேந்தன்
சனாதன பேச்சு: உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ரூ. 25 கோடி லாட்டரி: ஜாக்பாட் அடித்தது யாருக்கு ?
33 % இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: மோடியை பாராட்டிய பெண் எம். பி – க்கள்!
நீங்க கிழிச்சி தைத்தது எதுவோ!