அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு: பாஜக அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி!

Published On:

| By christopher

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை உயர்த்தி, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து மக்களை பாஜக கைவிட்டு விட்டதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்..

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் திடீர் கோடை மழையால் விளைச்சல் குறைந்து செடிகளில் அழுகும் நிலையில் தக்காளி உள்ளன. இதனால் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயாக விற்பனையாகிறது. புறநகர் பகுதிகளில் 110 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகிறது.

இதனை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் மக்களை நடுங்க வைக்கும் இந்த விலைவாசி உயர்வு குறித்து மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல்காந்தி.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு கிலோ தக்காளி ரூ. 140க்கும்,  1 கிலோ காலிஃபிளவர் ரூ.80 க்கும், துவரம் பருப்பு கிலோ ரூ.148க்கும், பிராண்ட்ட் துவரம் பருப்பு கிலோ ரூ.219 க்கும் விற்பனையாகிறது.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,100க்கு மேல் உயர்ந்து விற்பனையாகிறது.

முதலாளிகளின் சொத்துக்களைப் பெருக்குவதற்காக, பொதுமக்களிடம் வரி வசூலிப்பதில் மும்முரமாக இருக்கும் மத்திய பாஜக அரசு, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை முற்றிலும் மறந்து விட்டது.

இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பணவீக்கத்தால் மக்களின் சேமிப்பு முடிந்துவிட்டது. ஏழைகள் சாப்பிட முடியாமலும், நடுத்தர மக்கள் சேமிக்க முடியாமலும் தவிக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், பணவீக்கத்தில் இருந்து நிவாரணம் வழங்குவதற்காக சிலிண்டர் விலையை குறைத்துள்ளோம்.

பாரத் ஜோடோ யாத்ரா என்பது வெறுப்பை நீக்குவதற்கும், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றுவதற்கும், சமத்துவத்தை கொண்டு வருவதற்குமான உறுதிமொழி. மேலும் பொதுப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாஜகவை அனுமதிக்க முடியாது.

பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆன போதும் நாட்டில் இதே நிலைமையே நிலவுகிறது. இந்த துயரத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

குண்டர் சட்ட அதிகாரம்: மதுரை கிளை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

“வலியோடு இருக்கிறேன்” : நீதிபதியிடம் செந்தில் பாலாஜி பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel