நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வில், பாஜக அரசை விமர்சித்து பேசியதால், என் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். raid
கடந்த மாதம் ஜூலை 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, ”மகாபாரதத்தில் சக்கரவியூகம் அமைத்து அபிமன்யுவை கொன்றதுபோல, பாஜக அரசு பட்ஜெட் அறிவித்து நாட்டின் உழவர்கள், பெண்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசினார்.
மேலும், ஒன்றிய அரசின் பட்ஜெட் நடுத்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை மறுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் “ சில நபர்கள் தற்செயலாக இந்துவாகப் பிறந்துவிட்டார்கள் மற்றும் அவர்கள் மகாபாரதத்தைப் பற்றி தெரிந்துகொண்டதும் தற்செயலானது” என்று மறைமுகமாக ராகுல் காந்தியைத் தாக்கினார்.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக தனது வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடக்க திட்டமிட்டு வருவது ராகுல்காந்திக்கு தெரிய வந்ததது.
அதனை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட ராகுல், “நாடாளுமன்றத்தில் நான் பேசிய சக்கரவியூக பேச்சு இரண்டில் ஒருவருக்கு பிடிக்கவில்லை. என் வீட்டிற்கு ED ரெய்டு வருவதாக அமலாக்கத்துறைக்கு உள்ளிருந்தே என்னிடம் சொல்கிறார்கள். அமலாக்கத்துறையினர் வீட்டில் சோதனை நடத்த வரட்டும். நான் டீ, பிஸ்கட்டுடன் அவர்களுக்காக காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஷாக் கொடுக்கும் தங்கம் விலை… ரேட் எவ்வளவு தெரியுமா?
வயநாடு நிலச்சரிவு : கேரள அரசுக்கு விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி!
Share Market : வார இறுதி நாளில் எந்த பங்கில் முதலீடு செய்யலாம்?
அமலாக்கத்துறை, மிக மோசமாக தன் ஆளுமையை, மாண்பை சீரழித்துக் கொண்டே செல்கிறது, இதற்கு காரணம்…?