காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 26) டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட மறைந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
100 நாட்களை கடந்து ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, தற்போது வரை 2,800 கி.மீ தூரம் நடைபயணம் செய்துள்ளார்.
ராகுல் காந்தி நடைபயணத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், நடிகை ஸ்வரா பாஸ்கர், ரியா சென் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தற்போது டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட மறைந்த முன்னாள் தலைவர்கள் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்படி, மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், லால் பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் உடன் சென்றனர்.
செல்வம்
நாளை முதல் பொங்கல் ‘டோக்கன்’: மக்களே ரெடியா?
சுனாமி நினைவு தினம்: மக்கள் அஞ்சலி!