மோடியின் சக்கர வியூகத்தை மக்கள் உடைப்பார்கள் என்று பொதுத் துறை வங்கிகளில் 8500 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வில்லை எனில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 12 பொதுத் துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 8,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்திருந்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,538 கோடி, இந்தியன் வங்கி ரூ.1,466 கோடி, பாங்க் ஆஃப் பரோடா ரூ.1,250 கோடி, கனரா வங்கி ரூ.1,157 கோடி பாங்க் ஆஃப் இந்தியா ரூ.827 கோடி வசூலித்துள்ளன.
2019-20 ஆம் ஆண்டில் ரூ.1738 கோடியும், 2020-21ல் ரூ.1,142 கோடியும், 2021-22ல் ரூ.1,429 கோடியும், 2022-23ல் ரூ.1,855 கோடியும், 2023-24ல் ரூ.2,331 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 2,331 கோடி மினிமம் பேலன்ஸ் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 25 சதவிகிதம் அதிகமாகும்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 30)அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளை கூட விடவில்லை.
பிரதமர் மோடி அவரது நண்பர்களான தொழில் அதிபர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்.
ஆனால் ‘மினிமம் பேலன்ஸ்’ கூட பராமரிக்க முடியாத ஏழை இந்தியர்களிடம் இருந்து ரூ.8500 கோடியை இந்த அரசு வசூலித்திருக்கிறது.
சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்திய மக்கள் அபிமன்யு அல்ல அர்ஜுனர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின் சக்கர வியூகத்தை உடைத்து பதில் சொல்ல அவர்களுக்குத் தெரியும்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வயநாடு நிலச்சரிவு : நீலகிரியை சேர்ந்தவர் பலி!
யுபிஏ ஆட்சியில் எல்லா மாநிலங்களின் பெயர்களையும் சொன்னீர்களா?: நிர்மலா சீதாராமன் கேள்வி!