எனது பேச்சை மீண்டும் சேருங்கள் : ஓம்.பிர்லாவுக்கு ராகுல் கடிதம்!

அரசியல்

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 24ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், என்.டி.ஏ கூட்டணி அரசையும் விமர்சித்து வருகிறார்.

பிரதமர் மோடி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையாக சாடினார். அக்னிபத் திட்டம், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறிப்பிட்டும் பேசினார்.

இந்நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ் உட்பட ராகுல் பேசிய 11 பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, உண்மையை என்றுமே மறைக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து அவர், மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கள யதார்த்தத்தையும் உண்மை நிலையையும் தான் அவையில் கூறினேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, “

மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 380ல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை நீக்குவதற்கான அதிகாரங்களை சபாநாயகர் பெறுகிறார்.

எனது உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. நீக்கப்பட்ட வார்த்தைகள் விதி 380ன் கீழ் வராது.

மக்களவை பிரநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்திய அரசியலமைப்பின் 105 (1)வது பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உள்ளது.

அவையில் மக்களின் பிரச்சினைகளை எழுப்புவது உறுப்பினர்களின் உரிமை.

மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றும் விதத்தில்தான் நேற்று செயல்பட்டேன். எனது கருத்துகளை பதிவுகளில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.

இந்த தருணத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் பேச்சை குறிப்பிட விரும்புகிறேன். அவரது பேச்சு குற்றச்சாட்டுகள் நிறைந்து இருந்த நிலையில், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது.

எனவே நீக்கப்பட்ட எனது கருத்துகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

பாமக பிரச்சார பேனரில் ஜெயலலிதா புகைப்படம் : நன்றி சொன்ன ஜெயக்குமார்

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசிற்கு அன்புமணி வலியுறுத்தல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *