காங்கிரஸ் தலைவர் யார்? நிறைவேறிய முக்கிய தீர்மானம்!

அரசியல்

ராஜஸ்தானில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24ம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.

10வது நாளாக கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு ஆதரவாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நேற்று செப்டம்பர் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்குவதற்கான தீர்மானத்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்தார்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு மூலம் ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராகுல்காந்தி தலைமை குறித்து கட்சிக்குள் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.

rahul gandhi is congress president

இதுகுறித்து கூட்டத்திற்குப் பிறகு பேசிய மாநில உணவுத்துறை அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியா, ”முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்த காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சி மேலிடத்திற்கு வழங்கியும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என்று கச்சாரியா கூறினார்.

ராஜஸ்தானில் 400 பிரதிநிதிகள் கொண்ட காங்கிரஸ் கமிட்டியில் நேற்று சுமார் 200 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேலும் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்துகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பாஜகவில் இணையும் அம்ரீந்தர் சிங்

புதிய மணல் குவாரிகள் திறந்தால்…. பாமக எச்சரிக்கை!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.