தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டதை அடுத்து மக்களவைக்கு வந்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி நிறுத்தி வைத்தது.
இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 7) ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது.
இதனால் ராகுல் காந்தி 134 நாட்களுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். முதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு மக்களவைக்குச் சென்றார்.
அங்கு நுழைவாயிலில் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
இதையடுத்து அவைக்குள் சென்று அலுவல்களில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். எனினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரம் ஆகியவற்றைப் பேச வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என்று குறிப்பிடப்பட்டிருந்த ட்விட்டர் பயோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்று மாற்றியுள்ளார் ராகுல் காந்தி.
பிரியா
“செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12-வரை ED காவல்” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
திமுக அமைதிப் பேரணி: கவுன்சிலர் மரணம் !