ஸ்டாலினுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் ஸ்வீட்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ராகுல் காந்தி நேற்று (ஏப்ரல் 12) நெல்லை வந்தார். அங்கு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

முன்னதாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ்வரா ஸ்வீட் கடைக்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக தனது காரை நிறுத்தி சாலை தடுப்புகளை தாண்டி ஸ்வீட் கடைக்கு சென்றார். அங்கிருந்த கடை ஊழியர்களிடம் கை கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது கடை ஊழியர் ஒருவர் ராகுல் காந்தியிடம், ”யாருக்காக ஸ்வீட் வாங்கி செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ராகுல் காந்தி, ”என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக வாங்கி செல்கிறேன்” என்றார்.

தொடர்ந்து கடை ஊழியர்கள் கொடுத்த மைசூர் பாக்கை சுவைத்தார். பின்னர் ஸ்வீட் வாங்கியதற்கான தொகையை கொடுத்து விட்டு, கடை ஊழியர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ராகுல் காந்தி, ஸ்டாலினிடம் ஸ்வீட் பாக்சை கொடுத்தார். அப்போது அருகிலிருந்த செல்வபெருந்தகை, “உங்களுக்காக சாலை தடுப்பையெல்லாம் தாண்டி போய் ஸ்வீட் வாங்கியிருக்கிறார்” என்றார். இதனை சற்றும் எதிர்பாராத ஸ்டாலின் புன்னகை ததும்ப ராகுலுக்கு நன்றி கூறினார்.

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு இனிமை சேர்க்கும் வகையில் எனது சகோதரர் ஸ்டாலினுக்கு கொஞ்சம் மைசூர் பாக் வாங்கி கொடுத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயிலர் 2 டைட்டில் இதுதான்?… வெளியான புதிய தகவல்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts